ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (21:35 IST)

திருமாவளவன் பார்த்து பாராட்டு தெரிவித்த திரைப்படம்

உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகிய 'கண்ணே கலைமானே' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் சிறப்பு காட்சி முக்கிய பிரபலங்களுக்காக திரையிடப்பட்டது. இந்த காட்சியை தொல்.திருமாவளவன், முத்தரசன் உட்படப் பல முக்கிய பிரமுகர்கள் பார்த்தனர்
 
'கண்ணே கலைமானே' படம் பார்த்து முடித்தவுடான் திருமாவளவன் இந்த படம் குறித்து கூறியதாவது: 'கண்ணே கலைமானே' படம் மிகவும் யதார்த்தமானதாக இருக்கிறது. உதயநிதி உட்பட நடித்திருக்கும் அனைவரும் யதார்த்தத்துக்குச் சற்றும் மாறாமல் நடித்திருந்தனர். குறிப்பாக, யுவன் ஷங்கர் ராஜாவின் கிராமத்து இசையும், வைரமுத்துவின் அர்த்தமுள்ள வரிகளும் சிறப்பாக உள்ளது. மொத்தத்தில் இது கவித்துவமான திரைப்படம்" என்று கூறினார். 
 
அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இந்த படம் குறித்து கூறியபோது, சீனு ராமசாமி, கிராமத்து மனிதர்களின் வாழ்வியலையும், குடும்ப உறவுகளின் பற்றுதலையும் மிக அழகாகப் படம் பிடித்திருக்கிறார். காண்பதற்கு நிறைவான படமாக இருக்கிறது," என்று பாராட்டு தெரிவித்தார்.