செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 4 பிப்ரவரி 2019 (17:25 IST)

உதயநிதியுடன் ரொமான்ஸ் செய்யும் மீசைய முறுக்கு நடிகை!

நடிகை ஆத்மிகா உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து டூயட் ஆடவுள்ளாராம்..! 



2017ம் ஆண்டு வெளியான மீசைய முறுக்கு படத்தில் அறிமுக நாயகியாக நடிகர் ஹிப் ஆப் ஆதிக்கு ஜோடியாக நடித்து இளசுகளின் நெஞ்சங்களை கொள்ளைக் கொண்டார் நடிகை ஆத்மிகா . 
 
உதயநிதி ஸ்டாலின் தற்போது கண்ணே கலைமானே படத்தில் நடித்துவருகிறார். இந்த படம் இந்த மாதம் வெளிவரவுள்ளது.
 
அப்படத்தை தொடர்ந்து இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி நடிக்கவிருக்கிறார். மு.மாறன் இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற வெற்றி படத்தை  இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கண்ணை நம்பாதே  என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக மீசைய முறுக்கு படத்தின் புகழ் நடிகை ஆத்மீகா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாம் .சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார்.   ராட்சசன் படத்திற்கு எடிட்டிங் செய்த சான் லோகேஷ் எடிட்டிங்க் பணியை கவனிக்க உள்ளாராம். 


 
புகழ்பெற்ற பிரபலங்கள் பலர் ஒன்றிணைந்துள்ள இப்படத்தின்  படப்பிடிப்பு அடுத்த வாரம் முதல் தொடங்கும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.