செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (18:34 IST)

பிக்பாஸ் நிகழ்ச்சியினால் சமுதாயத்திற்கு எந்த ஒரு பயனும் இல்லை: அமீர்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் மற்ற சீசனில் இல்லாத சர்ச்சைகள் அதிகம் உள்ளன. சரவணன், மதுமிதா ஆகியோர்களின் திடீர் வெளியேற்றம், மக்கள் வெளியேற்றிய வனிதாவை மீண்டும் போட்டியாளர் ஆக்கியது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் அரசியல் பேசினால் தவறில்லை, மதுமிதா பேசினால் மட்டும் கண்டிப்பது, ஆகியவை இருந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
 
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியால் சமுதாயத்திற்கு எந்த பயனும் இல்லை என இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார். கமல்ஹாசனுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தபோதும் கமல்ஹாசன் நடத்தும் ஒரு நிகழ்ச்சியை அவர் குறை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 
பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து மேலும் இயக்குனர் அமீர் கூறியதாவது: ‘எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றியைப் பேசுவது பிடிக்காது. இருந்தாலும், சேரன் அந்த நிகழ்ச்சியில் இருப்பதால் பேசுகிறேன். அவரை நான் பிரமிப்பாக பார்ப்பேன். ‘ஆட்டோகிராஃப்’ படத்திற்கு பிறகு லயோலாவில் ஒரு விழாவிற்கு வருகை தந்த வேளையில் இரண்டாயிரம் பேர் எழுந்து நின்று கைத்தட்டினார்கள். அந்த மரியாதைக்குரிய மனிதர் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரின் நிலைமையைப் பார்த்ததும் கதவை உடைத்து அவரைத் தூக்கிக் கொண்டு வரவேண்டும் போலிருந்தது. அந்த நிகழ்ச்சியை நான் பார்த்ததுக் கிடையாது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் தான் பார்த்தேன். மேலும், அந்த நிகழ்ச்சியினால் சமுதாயத்திற்கு எந்த ஒரு பயனும் கிடையாது’ என்று கூறினார்