புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 22 ஆகஸ்ட் 2019 (13:04 IST)

நீங்க என்ன வேணா நினைச்சுக்கோங்க நான் கவினுக்கு சப்போர்ட் பண்ணுவேன்!

இன்று முழுக்க கவின் புராணம் தான் பிக்பாஸ் வீட்டில் பேசப்பட்டு வருகிறது. முதல் ப்ரோமோவை தொடர்ந்து தற்போது வெளிவந்துள்ள இரண்டாவது ப்ரோமோவிலும்  கவினுக்கும் தனக்கும் உள்ள காதல் உறவை சேரப்பாவிடம் விளக்கிக்கொண்டிருக்கிறார் லொஸ்லியா. 


 
சாக்ஷி , அபிராமி உள்ளிட்டோர் வெளியேறியதிலிருந்தே லொஸ்லியா கவினிடம் மிகவும் நெருக்கமாக பழகி வருகிறார். இதனை கண்டிக்கும் விதமாக சேரன் கார்டன் ஏரியாவில் அமர்ந்துக்கொண்டு லொஸ்லியாவிடம் கேட்கிறார். ஆனால் லொஸ்லியாவோ... தப்போ சரியோ.. கவின் எனக்காக நிறைய விஷயத்தில் உடன் நின்றிருக்கிறார். அதற்காக நானும் கவினுக்கு சப்போர்ட்டாக எப்போதும் இருப்பேன்.. ஆமாம்.. எனக்கு கவினை ரொம்ப பிடிச்சிருக்கு.. அவனுக்கும் என்ன உண்மையாகவே பிடித்திருக்கு... நாங்கள் வெளியில் சென்ற பிறகு இதை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்வதை பற்றி யோசிப்போம் என்று கூறுகிறார். 
 
இதனை கண்ட நெட்டிசன்ஸ் பலரும்... உன்னை விட அழகான ஒரு பெண்ணை பிக்பாஸ் கொண்டுவந்து இறக்கினால் கவின் புத்தி என்ன என்பது பிறகு புரியும் உனக்கு என கூறி வருகின்றனர்.