வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 22 டிசம்பர் 2018 (19:48 IST)

மலையாள நடிகர் கே.எல்.ஆண்டனி காலமானார்!

பிரபல மலையாள நாடக மற்றும் திரைப்பட நடிகரான கே எஸ் ஆண்டனி காலமானார்.


 
மலையாள நாடக மற்றும் திரைப்பட நடிகர் கே.எல்.ஆன்டனி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மரணமடைந்தார். அவருக்கு மனைவி லீனா, இவருக்கு ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர். அவரது பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு மலையாள திரையுலகினர் பலர் தங்களது இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர். 
 
கேரளாவில் ஆலப்புழாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கே.எல்.ஆண்டனி உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உயிரிழந்தார். 
 
இவர் 2016ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'மஹேஷ்ஷிண்டே ப்ரதிகாரணம்' என்ற படத்தில் 'சச்சான்' என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றார். இந்த படத்தில் பிரபல நடிகர் பகத் பாசிலுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தில் அவரின் நடிப்புக்காக தேசிய விருது வழங்கப்பட்டது. மேலும், 1952ம் ஆண்டு முதல் முழுநேர நாடக நடிகராக இருந்தார். பல்வேறு நாடகங்களை இயக்கியும் நடித்திருந்தார். 
 
இவரின் இறப்பு மலையான திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.