கனா திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண் ராஜா காமராஜ் இயக்கியுள்ள படம் கனா. பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதை ஊக்குவிக்கும் வகையில் இப்படத்தை அருண் ராஜா உருவாக்கி உள்ளார்.
இப்படத்தில் கதை நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். சத்யராஜ் ஐஸ்வர்யா ராஜேஷின் தந்தையாக நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் கிரிக்கெட் பயிற்சியாளராக நடித்துள்ளார்.
இப்படம் கடந்த 21ம் தேதி வெளியாகி பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. திரை உலகில் பலரது பாராட்டை பெற்றுள்ள கனா படம், ரசிகர்களின் ஆதரவு காரணமாக வெளியாகும திரையரங்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.