ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (14:47 IST)

ஓடிடி பிரச்சனைக்கு முடிவு காணாவிட்டால் தியேட்டர்களை மூடிவிடுவோம்: எச்சரிக்கை

ஓடிடி பிரச்சனைக்கு சுமூக முடிவு காணாவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களையும் மூடிவிடுவோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
மாஸ் நடிகர்களின் படங்கள் தவிர மற்ற படங்கள் திரையரங்குகளில் போதிய வசூல் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு ஒரே காரணம் திரைப்படம் வெளியான ஒரே மாதத்தில் ஓடிடிக்கு வந்துவிடும் என்பதால் ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என்று பொதுமக்கள் திரையரங்குகளுக்கு வரவில்லை என்று கூறப்பட்டுள்ளது. 
 
எனவே ஓடிடியில் ஒரே மாதத்தில் திரைப்படங்களை வெளியிடும் போக்கை நிறுத்த வேண்டும் என்றும் இதற்கு ஒரு சமூக முடிவு எடுக்காவிட்டால் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் மூடி விடுவோம் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஏற்கனவே சென்னை உதயம் தியேட்டர் பல திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் ஓடிடி ஆதிக்கத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran