ஒரு வழியாக விற்பனை ஆன லால் சலாம் படத்தின் ஓடிடி உரிமம்!
ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘லால் சலாம்’ திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் முதல் காட்சியில் இருந்தே எதிர்பார்த்த அளவு கூட்டம் வரவில்லை என சொல்லப்பட்டது. இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கியமான ரோல்களில் நடித்துள்ளனர். ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இதுவரை லால் சலாம் திரைப்படம் சுமார் 10 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தமிழ்நாடு மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களிலும் எதிர்பார்த்த வசூல் இல்லை என சொல்லப்படுகிறது. ரஜினி என்ற ஒரு சூப்பர் ஸ்டார் இருந்தும் லால் சலாம் படத்துக்கு பெரிய வரவேற்பு இல்லாததைக் காட்டுகிறது.
இந்நிலையில் லால் சலாம் படம் ஒரு படுதோல்வி படமாக அமைந்தது. இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. மார்ச் மாதம் முதல் வாரத்தில் இந்த படம் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகும் என சொல்லப்படுகிறது.