புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (19:54 IST)

வெயிட்டிங் இஸ் ஓவர்: நாளை வெளியாகும் காப்பான் டிரெய்லர்!!

சூர்யா நடிப்பில் ரிலீஸுக்கு தயராகியுள்ள காப்பான் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளது. 
 
சூர்யா, சாயிஷா, மோகன்லால், ஆர்யா, பொமன் இரானி, சமுத்திரக்கனி, பிரேம், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். 
 
இந்நிலையில் காப்பான் திரைப்படம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. 
 
இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் டிரெய்லர் வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆம், படத்தின் டிரெய்லர் 7 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.