1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (08:26 IST)

காப்பானுக்கு வந்த அடுத்த சிக்கல் – நீதிமன்றத்தில் கதைத் திருட்டுப் புகார் !

சூர்யா, மோகன்லால் மற்றும் ஆர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கியுள்ள காப்பான் படம் செப்டம்பர் 26 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்துக்கு ஏற்கனவே லைகா மூலமாக விநியோகஸ்தர்கள் தரப்பில் பிரச்சனை எழுந்துள்ள நிலையில் இப்போது கதைத் திருட்டுப் புகாரும் எழுந்துள்ளது.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் காப்பான் படத்தின் கதை தன்னுடையது என்றும் அதைத் திருடி கே.வி.ஆனந்த் படம் இயக்கியுள்ளதாகவும்  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில் ‘ நான் சரவெடி என்ற பெயரில் எழுதிய கதையை இயக்குனர் கே வி ஆனந்திடம் சொல்லி இருந்தேன். கதையை முழுவதுமாகக் கேட்ட அவர் இந்தப் படம் எடுக்கும்போது உங்களுக்கு வாய்ப்பளிக்கிறேன் எனக் கூறினார். நான் வைத்திருந்த பல விஷயங்கள் படத்தில் இருப்பதை அதன் முன்னோட்டக்காட்சிகள் காட்டுகின்றன. பெயரை மட்டும் மாற்றி என்னுடையக் கதையை அவர் எடுத்துள்ளார்.’ எனத் தெரிவித்துள்ளார்.

அவரது வாதத்தை ஏற்ற நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.