தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைகிறதா நடப்பு தயாரிப்பாளர் சங்கம்?
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடன் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முரளி ராமசாமி தலைமையில் இயங்கி வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பாரதிராஜா தலைமையில் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் என்ற புதிய சங்கத் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இதில் பிரபல தயாரிப்பாளர் உறுப்பினராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடன் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் இணைந்து செயல்பட இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் இந்த செய்தியை நடப்பு தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தினர் மறுத்துள்ளனர்
நாங்கள் தனியாகத்தான் செயல்படப் போகிறோம் என்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் உடன் இணையப் போவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். ஆனால் அதே நேரத்தில் சினிமாவுக்கு ஒரு பிரச்சனை வரும்போது இரு சங்கங்களும் இணைந்து முடிவு எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது