1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (17:20 IST)

ரஜினி படத்தின் பெயரை மாற்றுவாரா ஏ வெங்கடேஷ்!

இயக்குனர் ஏ வெங்கடேஷ் படத்தின் புதிய படத்துக்கு ரஜினி என்ற பெயர் வைத்துள்ள நிலையில் அதை மாற்ற உள்ளதாக சொல்லப்படுகிறது.

பிரபலங்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் புனைப்பெயர்களில் திரைப்படங்களுக்கு தலைப்பு வைத்தால் வெகுஜனங்களிடம் எளிதாக சென்று சேரலாம் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் இயக்குனர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் ரஜினி என்ற படம் உருவாவதாக சொல்லப்பட்டது. ஆனால் இந்த தலைப்பு வைக்க ரஜினிகாந்தின் குடும்பத்தினர் ஆட்சேபம் தெரிவித்துள்ளாராம்.

இதையடுத்து ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா ஏ வெங்கடேஷோடு பேச்சுவார்த்தை நடத்தியதில் படத்தின் பெயரை ரஜினி ரசிகன் என்று மாற்ற உள்ளதாக சொல்லப்படுகிறது.