திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 5 செப்டம்பர் 2022 (08:26 IST)

“எனது ஆரம்பகால நாட்களை ஞாபகப்படுத்தியது…” பா ரஞ்சித் படம் பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்!

பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.

இயக்குனர் பா ரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்குப் பிறகு இப்போது முற்றிலும் வளர்ந்து வரும் கலைஞர்களை வைத்து நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கியுள்ளார். வழக்கமான தன் தொழில் நுட்பக்கலைஞர்கள் இல்லாமல் நிறைய புதுமுகக் கலைஞர்களோடு இந்த படத்தில் பணியாற்றி வருகிறார். இந்த திரைப்படம்  கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

நல்ல விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து பாராட்டியுள்ளார். இது சம்மந்தமாக அவர் இயக்குனர் ரஞ்சித்திடம் “ எழுத்து, இயக்கம், நடிப்பு, இசை, எடிட்டிங் மற்றும் நடிகர்கள் தேர்வு என அனைத்திலும் உங்களின் சிறப்பான படமாக நட்சத்திரம் நகர்கிறது அமைந்துள்ளது. மேலும் படம் தன்னுடைய ஆரம்பகால நாடக வாழ்க்கையை நினைவு படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.