செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : சனி, 7 நவம்பர் 2020 (15:32 IST)

’’விஜய் வேண்டாம் என்று கூறியும் எஸ்.ஏ.சி கேட்கவில்லை - விஜய்யின் அம்மா விளக்கம்

கடந்த இரண்டு தினங்களாகவே நடிகர் விஜய்யும் அவரது அப்பாவுக்கு அரசியல் கட்சித் தொடங்குவதில் கருத்துவேறுபாடு இருப்பாதாக ஊடகங்கள் ஊகித்து வந்த நிலையில் இன்று பேட்டியளித்த எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய்க்கும் தனது எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை என்று கூறினார்.

இந்நிலையில் தற்போது நடிகர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் இதுகுறித்து விளக்கமாகக் கூறியுள்ளார்.

அதில், விஜய்யின் தந்தை தொடங்கிய கட்சியில் பொருளாளராக நான் இல்லை அதிலிருந்து நான் விலகி விட்டேன்.

அரசியல் பேச வேண்டாம் என பலமுறை எஸ்.ஏ.சியிடம் கூறியிருந்த போதிலும் அதைக் கேட்காததால் விஜய் அவரிடம் பேசுவதில்லை.

அசோசியேஷன் தொடங்குவதாக என்னிடம் எஸ்.ஏ.சி கையெழுத்துப் பெற்றார்.

ஆனால் கட்சி தொடங்குதாக அவர் என்னிடம் இரண்டு முறை கையெழுத்துப் போடுமாறு கேட்டபோதும் நான் போடவில்லை அதனால் அக்கட்சியின் பொருளாளர் பொறுப்பிலிருந்து நான் விலகிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

இதிலிருந்து விஜய்யும் அவரது தந்தைக்கும் இடையே அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாகக் கருத்து வேறுபாடு நீடித்து வருவது சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது.