1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 8 அக்டோபர் 2018 (14:05 IST)

ரஜினியின் " பேட்ட” படத்தில் இணைந்த அடுத்த பிரபலம்...

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் பேட்ட படப்பிடிப்பு தளத்தில் ரஜினி இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியானதால் படக்குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். மேலும், பாதுகாப்பை பல கட்டமாக பலப்படுத்தினர். 
இதனை  தொடர்ந்து லக்னோவில் ரஜினி நடித்த காட்சிகள் லீக் ஆகி அது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இதனால்  பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் படப்பிடிப்பு நடைபெறுகிறது
 
இந்நிலையில், இந்த படத்தில் முள்ளும் மலரும், உதிரி பூக்கள் உள்ளிட்ட காலத்தில் அழியாத பல  படங்களை இயக்கிய மகேந்திரன் பேட்ட படத்தில்  இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இயக்குனர் மகேந்திரனும்  போட்டோ ஒன்றை வெளியிட்டு அதை உறுதிப்படுத்தியுள்ளார்.
 
இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த  தெறி படத்தில் பயங்கர வில்லனாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ஆவார். இவர் பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறாரா அல்லது குணச்சித்திர வேடமா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.