தீண்டத்தகாதவர் போல் என்னை போலீஸார் நடத்தினர்... டிவி தொகுப்பாளினி புகார் !
தமிழ் தொலைக்காட்சிகளில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளனர் டிவி தொகுப்பாளினி திவ்யா.
இவர் பல்வேறு சினிமா படங்களில் பாடல்கள் பாடி பிரபல பின்னணி பாடகியாகவும் விளங்குகிறார்.
இந்நிலையில்., இவர் தனது கணவருடம் பாரீஸ் சென்றபோது மொபைல், லேப்டாப் , பாஸ்போர்ட் ஐ பேட் ஆகியவை திருட்டு போனதாதாகவும் அங்குள்ள போலீஸார் புகார் பெற மறுத்ததாகவும் பின்னர், திருட்டு போன பொருட்களுக்கு இன்ஸ்சூரன்ஸ் செய்திருந்தால் அதை கிளைம் செய்து கொள்ளும்படி அவர்கள் கூறியதுடன் தங்களை தீண்டத்தகாதவர்கள் போல நடத்தியதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
அதனால் வெளிநாடு செல்பவர்கள் பொருட்களைப் பாதுக்காப்பாக வைத்துக் கொள்ளும் படி மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.