வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 12 ஜூலை 2017 (14:10 IST)

கோவாவில் 20 ஆண்டுகளாக நிர்வாணமாக அடைத்து வைக்கப்பட்ட பெண் மீட்பு

கோவாவில் 20 ஆண்டுகளாக நிர்வாணமாக அடைத்து வைக்கப்பட்ட பெண்ணை காவல்துறையினர் மீட்டனர்.





 
கோவா மாநிலம் கேண்டலிம் பகுதியில் 50 வயதுடைய பெண் ஒருவர் நிர்வாண நிலையில் ஒரு வீட்டின் சிறிய அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளார். இச்செய்தியை கேள்விப்பட்ட தன்னார்வ நிறுவனர்கள் சிலர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
 
உடனே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண்ணை அங்கிருந்து மீட்டனர். பின் அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் அடைக்கப்பட்ட காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
அந்த பெண் அடைக்கப்பட்டு இருந்த அறையில் மின்சாரம் எதுவும் இல்லை. அது அந்த பெண்ணின் சகோதரர் வீடு என்று கூறப்படுகிறது. கதவின் சிறிய துவாரம் வழியாக அந்த பெண்ணுக்கு உணவு அளிக்கப்பட்டு வந்துள்ளது. கடந்த 20 வருடங்களாக அந்த பெண் அந்த இருட்டு அறையில் அடைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.