வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By naga-samantha (Sasi)
Last Modified: திங்கள், 10 ஜூலை 2017 (10:50 IST)

கோவாவில் திருமணம் செய்துகொள்ளும் நாக சைதன்யா – சமந்தா

நாக சைதன்யா – சமந்தா திருமணம் கோவாவில் நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
 
 
தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவிற்கும், சமந்தாவுக்கும் அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம், ஹைதராபாத்தில் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. எனவே, ஹைதராபாத் அல்லது சென்னையில்தான் திருமணமும் நடக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால், சுற்றுலாத்தலமான கோவாவில் திருமணம் நடைபெற இருப்பதாக  நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
 
வார இறுதியில் திட்டமிடப்பட்டுள்ள இந்த திருமணம், முதல் நாள் சனிக்கிழமை தெலுங்கு முறைப்படியும், மறுநாள்  கோவாவின் பழம்பெரும் சர்ச்சிலும் நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்கு, உறவினர்கள் மற்றும் நெருக்கமான நண்பர்கள்  என 100 பேர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளார்களாம்.