திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : திங்கள், 15 அக்டோபர் 2018 (18:13 IST)

காதலில், பாடலில், காட்சிகளில்... மட்டுமல்ல வசூலிலும் '96' செம்ம...

விஜய் சேதுபதி-திரிஷா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த படம் 96. படத்தில் வரும் காதலை பட ரிலீசுக்கு முன்பே பாடல்கள் உணர்த்தியதால், மக்களிடம் செம்ம வரவேற்பு கிடைத்தது. 
 
இத்துடன் ஒவ்வொருவருடைய பள்ளி கால சம்பவங்களையும் பொருத்தி பார்க்கும்படி கதை இருந்ததால் 96 படம் ரிலீஸ் ஆன பின்னர் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
 
படம் வெளியானதில் இருந்து அதில் வரும் சின்ன சின்ன காட்சிகள் வாட்ஸ் அப்பில் அதிகம் உலா வருவதை பார்க்கும் போதே இப்படம் எந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளது என்பதை அனைவரும் அறிவோம்.
 
96 படம் சென்னையில் 11 நாள் முடிவில் மட்டும் ரூ. 4.21 கோடி வசூலித்துள்ளது. படத்திற்கு மக்களிடம் அதிகம் வரவேற்பு இருப்பதால் இன்னும் வசூலில் சாதனை படைக்கும் என தெரிகிறது.