புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 10 நவம்பர் 2018 (20:03 IST)

பேனரை கிழித்த அதிமுகவுக்கு பாடம் புகட்டிய "தல - தளபதி" ரசிகர்கள்!

தமிழ் சினிமாவிலேயே முடிசூடா மன்னர்களாக திகழ்பவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய்.  
இவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இவர்கள் இருவரும் என்னதான் நண்பர்களாக இருந்தாலும், ரசிகர்கள் மட்டும்  எப்போதும் எலி, பூனையை போன்று ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வார்கள். அது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று .
 
ஆனால் இவர்களை மற்றவர்கள் சீண்டும்போது ஒன்றுசேர்வார்கள் என்பதை அவ்வப்போது காட்டியுள்ளனர்.
 
அந்தவகையில் சர்கார் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேனர்களை அதிமுகவினர் கிழித்து பிரச்சனை ஏற்படுத்தியதை அடுத்து, தல தளபதி ரசிகர்கள் ஒன்று சேர்ந்து பேனர் வைத்து அதற்கு பாலாபிஷேகம், கலர்பொடி என கொண்டாடியுள்ளனர்.
 
இவருவரின் ரசிகர்களால் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட அந்த பேனர் கொண்டாட்டம் தற்போது வைரலாகி வருகிறது. 

https://twitter.com/Surya_1499/status/1061240261785710592?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1061240261785710592&ref_url=https%3A%2F%2Fwww.cineulagam.com%2Factors%2F06%2F161825