1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 15 ஆகஸ்ட் 2020 (17:19 IST)

ரஜினியும் அஜித்தும் ஒருமணிநேரம் போனில் பேசினர் – யார் கிளப்பிய வதந்தி இது!

நடிகர் ரஜினிகாந்தின் 45 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை கொண்டாடும் விதமாக அஜித் ரஜினிக்கு போன் செய்து ஒருமணிநேரத்துக்கும் மேலாக பேசியதாக வெளியான தகவல் வதந்தி என சொல்லப்படுகிறது.

ரஜினிகாந்த் தமிழ் சினிமா உலகுக்கு அறிமுகமானது 75 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலமாக. அதன் பின்னர் தமிழ் சினிமாவில் வில்லனாக பல படங்களில் நடித்து ஒரு கட்டத்தில் கதாநாயகனாக மாறி பின்னர் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக மாறி வசூல் மழை பொழிந்தார். இந்நிலையில் இப்போதும் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார். அவர் சினிமாவுக்கு 45 ஆண்டுகள் ஆவதை ஒட்டி காமன் டிபியை சிவகார்த்திகேயன் மற்றும் மோகன்லால் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். 

இதையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்து சொல்லி சமூகவலைதளங்களில் பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் நடிகர் அஜித்குமார் நேரடியாக தொலைபேசியில் பேசி ரஜினிக்கு வாழ்த்து சொன்னதாக ஒரு செய்தி வெளியானது. ஆனால் அந்த செய்தி உண்மையில்லை என இப்போது தெரியவந்துள்ளது.