திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 26 அக்டோபர் 2017 (11:04 IST)

ரஜினி நடிப்பில் 2.O படத்தின் வைரலாகும் புதிய போஸ்டர்

சங்கர் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’வை ‘லைகா புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்து வருகிறார். சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு மிரட்டலான வில்லன் கதாபாத்திரமாம்.

 
‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இதற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக  நடைபெற்று வருகிறது.
 
படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகிற அக்டோபர் 27-ஆம் தேதி துபாயில் மிக பிரம்மாண்டமாக நடத்த ‘2.0’ படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இவ்விழாவில் ‘உலக நாயகன்’ நடிகர் கமல்ஹாசன் கலந்து கொள்ளவிருப்பதாக  கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். எமி ஜாக்சன்-சிட்டி இடம்பெற்றுள்ள இப்போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.