1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (11:59 IST)

உலகம் சுற்றும் அஜித்: ரஷ்யாவில் 5000 கிலோமீட்டர் பைக் ட்ரிப்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்போது வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். போனி கபூர் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.
 
கொரோனா ஊரடங்கினாள் படப்பிடிப்புகள் தள்ளிச்சென்றது. இதனால் படம் வெளியீட்டு தேதியும் தாமதமானது. இந்நிலையில் வருகிற தீபாவளி தினத்தை முன்னிட்டு நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ள வலிமை படத்தின் கடைசிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
 
தற்போது பைக் ஆக்ஷன் மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் ரஷ்யாவில் படமாக்கப்பட்டு வருகிறது. அப்போது படப்பிடிப்பு முடிந்ததும் ரஷ்யாவை சுற்றிப்பார்க்க விரும்பிய அஜித் பைக்கிலேயே  5000 கிலோமீட்டர் பயணித்து  ஜாலி ட்ரிப் சென்றுள்ளார். ஆளுயர பைக்குடன் அஜித் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.