செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (14:58 IST)

பழம்பெரும் பிரபல இசையமைப்பாளர் காலமானார்

பழம்பெரும் இசையமைப்பாளர் கோவர்த்தன் நேற்று சேலத்தில் காலமானார். அவருக்கு வயது 91. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் இவருக்கு அரசு உதவித்தொகையாக ரூ 10 லட்சம் வழங்கப்பட்டது.

 
தென்னிந்திய அளவில் ஆர்மோனியம் வாசிப்பதில் கைத்தேர்ந்தவர். சிவாஜியின் புதிய பறவை படத்தில் ரீ ரெக்கார்டிங்  செய்துகொண்டிந்த போது மின்சாரம் தாக்கியதால் காது கேட்கும் திறனை இழந்தார். தமிழ், தெகுங்கு, மலையாளம், கன்னடம்,  ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளிவந்த ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசை அமைத்தவர். இசையமைப்பாளர்கள் கே.வி. மாகாதேவன், இளையராஜா, விஸ்வநாதன்-ராமமூர்த்தி, சந்திரபோஸ், தேவா உள்ளிட்டோர் பாடல்களுக்கு இசைக் குறிப்புகளை எழுதியுள்ளார்.
 
இந்நிலையில் அவரது சொந்த ஊரான சேலம், குகைப்பாலம் பகுதியில் உள்ள இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது.