திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 6 மார்ச் 2023 (08:05 IST)

கடைசி முறையாக விவேக் மயில்சாமி இணைந்து நடித்த காட்சி... லெஜண்ட் படம் நெகிழ்ந்த ரசிகர்கள்!

சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் நடித்த தி லெஜன்ட் என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் ஓரளவு பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த திரைப்படம் கடந்த சில மாதங்களாக ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் சில தினங்களுக்கு முன்னர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. வெளியானது முதல் பரவலான கவனத்தை இந்த படம் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த காட்சிகளாக மயில்சாமி மற்றும் விவேக் இணைந்து நடித்த காட்சிகள் அமைந்துள்ளன. இருவருமே சமீபகாலங்களில் மறைந்துவிட்ட நிலையில் அது குறித்த நினைவுகளோடு ரசிகர்கள் இந்த காட்சிகளைப் பகிர்ந்து வருகின்றனர்.