1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 3 மார்ச் 2023 (11:27 IST)

’தி லெஜண்ட்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Legend
சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் நடித்த தி லெஜன்ட் என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் ஓரளவு பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த திரைப்படம் கடந்த சில மாதங்களாக ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் சற்றுமுன் லெஜன்ட் சரவணா தனது ட்விட்டர் பக்கத்தில் இன்றே ஓடிடியில் வெளியாகும் என அறிவித்துள்ளார். 
 
இன்றும் அதிகம் 12:30 மணி முதல் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ‘தி லெஜண்ட்’ வெளியாகும் என்றும் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஹாட்ஸ்டாரில் இந்த படத்தை பார்க்கலாம் என்றும் லெஜன்ட் சரவணன் அறிவித்துள்ளார். 
 
இதனை அடுத்து திரையரங்குகளில் இந்த படத்தை பார்க்காதவர்கள் ஓடிடியில் பார்த்து மகிழலாம் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva