மாயாஜால் திரையரங்கில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் ரத்து: நிர்வாகம் அறிவிப்பு..!
சென்னை மாயாஜால் திரையரங்கில் 3 நாட்களுக்கு 'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படம் திரையிடப்படுவது ரத்து செய்யப்பட்டுள்ளதாக திரையரங்கு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் இன்று நாடு முழுவதும் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இஸ்லாமிய அமைப்புகள் இந்த படம் வெளியான தியேட்டருக்கு எதிரே போராட்டம் நடத்தி வருகின்றன
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி சென்னை கானாத்தூர் மாயாஜால் திரையரங்கில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் மூன்று நாட்களுக்கு காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது
இந்த திரையரங்கில் இரவு 7:30 மற்றும் 10.30 காட்சிகள் தி கேரளா ஸ்டோரி திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த காட்சிகள் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாயாஜால் திரையரங்கில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Edited by Siva