திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : வெள்ளி, 5 மே 2023 (13:42 IST)

’தி கேரளா ஸ்டோரி’ திரையிடப்பட்ட தியேட்டர் முற்றுகை: கோவையில் பரபரப்பு..!

தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் கோவையில் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென இஸ்லாமிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கடும் எதிர்ப்புகளுக்கு இடையே இன்று தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் இந்தியா முழுவதும் வெளியாகியுள்ள நிலையில் கோவையில் உள்ள ஒரு சில திரையரங்குகளில் இந்த படம் வெளியாகி உள்ளது. 
 
இந்த நிலையில் திடீரென இந்த படத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தியதோடு இந்த படம் வெளியிட்ட தியேட்டர்களை முற்றுகையிட்டனர். இதனை அடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்று இருந்த காவல்துறையினர் உடனடியாக போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
கேரளாவில் உள்ள அப்பாவி பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ் அமைப்பில் சேர்வது போன்ற கதைய அம்சம் கொண்ட இந்த படத்திற்கு இஸ்லாமிய அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தென் தமிழகத்தில் திரையிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva