''துணிவு'' பட இசையமைப்பாளர் பகிர்ந்த புகைந்த புகைப்படம் வைரல்!
அஜித் நடித்து வரும் 'துணிவு 'படத்தின் இசையமைப்பாளார் ஜிப்ர்ஆன் தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படடம் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் துணிவு. இப்படத்தில், அஜித்துடன் இணைந்து, மஞ்சுவாரியர் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.
நேர்கொண்டபார்வை, வலிமை ஆகிய படங்களுக்குப் பின் ஹெச்.வினோத் இயக்கத்தின் ஆக்சன் படமாக உருவாகியுள்ளதால், இப்படத்திற்கு எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
இப்படத்தின் சில்லா சில்லா பாடம் மேக்கிங் பணிகளும், படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகளும் நடந்து வரும் நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான், தன் அலுவலகத்தில் துணிவு படத்தின் இசைக்கோர்ப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். இன்று அவர் தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படடம் வைரலாகி வருகிறது.
Edited by Sinoj