1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 3 டிசம்பர் 2019 (21:30 IST)

அஜித் படத்தில் மீண்டும் அருண்விஜய்? ஆனால்....

அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் அவருடைய அடுத்த படமான ’வலிமை’ திரைப்படத்தின் பூஜை கடந்த ஆகஸ்ட் மாதமே சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதமே தொடங்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இம்மாதம் இரண்டாவது வாரம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக படக்குழுவினர்களிடமிருந்து தகவல்கள் கசிந்துள்ளது
 
இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும், சமீபத்தில் நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் போனிகபூரை சந்தித்து செய்தியே இதனை உறுதிபடுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தேர்வு செய்யும் பணி முற்றிலும் முடிந்து விட்டதாகவும் படப்பிடிப்புக்கு செல்ல படக்குழு தற்போது தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் ஒன்றின் அருண் விஜய் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த படத்தில் அவர் வில்லனாக நடிக்கவில்லை என்றும் அஜித்தின் நண்பனாக படம் முழுவதும் வரும் ஒரு கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அஜித் நடித்த ’என்னை அறிந்தால்’ படத்தில் தான் அருண் விஜய் மீண்டும் ரீ-என்ட்ரி ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது
 
எச்.வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் நீரவ் ஷா ஒளிப்பதிவில், ப்ரவீண் கே.எல் படத்தொகுப்பில் ’வலிமை’படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது