செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 21 மார்ச் 2023 (23:11 IST)

சலூன் கடையில் குப்பைகளை அகற்றிய பிரபல நடிகர் !

பாலிவுட்  சினிமாவின் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் குப்பைகளை அகற்றும் புகைப்படம் வைரலாகும் நிலையில், அவரது செயலுக்கு விமர்சனம் எழுந்துள்ளது.

இந்தி சினிமாவின் முன்னணி நடிகர் ரன்வீர் சிங். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான பேண்ட் சர்மா பாராத் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்,. அதன்பின்னர், பாம்பே டாக்கீஸ்,ராம்லீலா, கிண்டி, கில் தில், பத்மாவத் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.

இவர்,  நடிகை தீபிகா படுகோனை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில், நிர்வாணப்புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், பிரபல திரைக்கலைஞர்களுக்கு சிகை அலங்காரம் செய்யும் தர்ஷன் யேவலேக்கரின் புதிய சலூன் கடை ஒன்றை ரன்வீர் சிங் திறந்துவைத்தார்.

அப்போது, கடையில் இருந்த குப்பைகளை ரன்வீர் அகற்றினார், பின்னர், ரோகன் ஸ்ரேஸ்தாவுடன் பிராங் விளையாடினார்.

இந்த நிலையில், ரன்வீர் சிங் குப்பைகளை அகற்றும் வீடியோ வைரலான நிலையில்,  அவர் தன்னை சுயவிளம்பரப்படுத்தும் நோக்கில் இதைச் செய்து வேண்டுமென்றே புகைப்படத்தை வைரலாக்கியதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். அதேசமயம், அவர் தூய்மை செய்த செயலுக்குப் பாராட்டும் குவிந்து வருகிறது.