புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 4 ஜூன் 2019 (16:20 IST)

தளபதி 63-யின் பிரம்மாண்ட செட்! இதுவரை வெளிவராத புகைப்படம் இதோ!

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் தளபதி விஜய் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லி கூட்டணியில்  தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக  'தளபதி 63' படத்திற்காக இணைந்துள்ளனர்.
 

 
விஜய்க்கு ஜோடியாக  நயன்தாரா நடிக்கும்  இப்படத்தில்  கதிர், யோகிபாபு டேனியல் பாலாஜிஉள்ளிட்டோர்  நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளார். மேலும் நடிகர் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் நடிக்கவிருப்பதாகவும் தகவல் கிடைத்தது.
 
விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்தில் நடிகர் விஜய் தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணியின்பயிற்சியாளராக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் ஷாரூக்கான் வில்லன் கதாபாத்திரத்தில் தோன்ற உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதியன்று வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தீபாவளிக்கு படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 
இப்படத்தில் நடிகர் விஜய், தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் கிடைத்தது. அதற்காக அப்பா விஜய்யின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளுக்காக அமைப்பாட்டிற்கும் செட்டின் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.  இந்த மைதானத்தை பார்க்கும் போது படத்தின் கிளைமாக்ஸில் நடைபெறும் கால்பந்து போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.