புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 3 ஜூன் 2019 (18:47 IST)

இரட்டை வேடத்தில் நடிக்கும் விஜய் : ’தளபதி 63’ சூப்பர் அப்டேட்

ஏஜிஎஸ் புரொடக்க்ஷன் தயாரிப்பில் அட்லி இயக்கும் புதிய படத்தில் தளபதி விஜய் நடிக்கிறார்.  இது விஜய்க்கு 63 வது படமாகும்.  இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவருடன் பரியேறும் பெருமாள் புகழ் கதிர், வில்லனாக பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் உள்பட பலர் நடிக்கிறார்கள். விவேக் பாடல் எழுதுகிறார்.  இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த தகவல்தான்.
இந்நிலையில் தற்போது அட்லி இயக்கிக் கொண்டிருக்கும் ’விஜய் 63 ‘படத்திற்கு உலக அளவில் பெருத்த எதிர்பார்ப்பு ஏற்ப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 
இந்நிலையில் இப்படத்திற்கு பலகோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் ஆகியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 
இந்நிலையில் தளபதி 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருந்தனர்.
 
தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளான ஜூன் 23 ஆம் தேதி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்தப் படத்தில் நடிகர் அப்பா, மகன் ஆகிய இரு வேடங்களில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் இப்படத்தின் ஷாருக்கான் வில்லன் கதாப்பாத்திரத்தில் தோன்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியானதால் ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர்.