வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 30 மார்ச் 2019 (11:24 IST)

ஆரவ் , ஓவியா படத்தின் முதல் பாடல் வெளியானது!

ஆரவ் நடிப்பில் உருவாகிவரும் ராஜபீமா படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. 
 

 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஆரவ் கதாநாயகனாக நடிக்கும் படம் ராஜபீமா. இந்தப் படத்தை இயக்குநர் நரேஷ் சம்பத் இயக்குகிறார். அஷிமா நர்வால் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். திரைக்கதையில் யானை பிரதானப்படுத்தப்பட்டுள்ளது. யானையோடு ஆரவ் இருக்கும் போஸ்டர் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியன்று வெளியிடப்பட்டது.
 
ராஜபீமா படத்தின் மூலம் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையே நடைபெற்றுக் கொண்டிருக்கும் உரசல்களையும், விதிமீறல்களையும் பேசியிருந்தாலும், கமெர்ஷியல் தேவைக்காக சிலவற்றை சேர்த்திருக்கிறார்கள். அதில் முக்கியமானது ஆரவ் மற்றும் ஓவியா நடனமாடும் பாடல்.
 
மேலும் யாஷிகா ஆனந்த்  இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.
சுரபி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சைமன் கே கிங் இசையமைக்கிறார். இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெறும்  முதல் பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.