1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 5 மார்ச் 2019 (21:25 IST)

இந்த படத்தலாம் ரிவ்யூ பண்றது இல்ல.. 90 ML படத்திற்கு ப்ளூ சட்டை மாறனின் செருப்படி!

பெஃமினிசம் என்று கூறி பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் புகை பிடிப்பது, குடிப்பது, கஞ்சா அடிப்பது, மோசமான இரட்டை அர்த்தங்களை கொண்டு பேசுவது என அத்தனையையும் 90ML படத்தில் இறக்கிவிட்டார்கள். 
 
ஆம், அனிதா உதீப் இயக்கத்தில் வெளிவந்த 90ML படத்திற்கு பல தரப்பிலிருந்தும் விமர்சன ரீதியாக மோசமாக விமர்சனங்கள் முன்வந்தது. அந்த வகையில் சமீபத்தில் பிரபல யுடியூப் சேனல் விமர்சகரான பிரசாந்த் 90ML படத்தை படுமோசமாக விமர்சித்திருந்தார். 
 
இந்நிலையில், மற்றும் ஒரு யுடியூப் சேனல் விமர்சகரான ப்ளு சட்டை மாறன் இந்த படத்திற்கு விமர்சனம் வழங்கவில்லை. இதை குறித்து இருவர் அவரிடம் சமூக வலைத்தளத்தில் கேட்ட போது,  இந்த மாதிரி பாடங்களுக்கு எல்லாம் விமர்சனம் கொடுப்பதில்லை என பதில் அளித்துள்ளார். 
 
இந்த பதிலை பலரும் வரவேற்றுள்ளனர். சிலரோ, படத்தின் இயக்குனருக்கு செருப்படி பதில் எனவும் கமெண்ட் செய்துள்ளனர்.