வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 18 ஜூன் 2018 (21:06 IST)

பிக்பாஸ் 2: முதல் டாஸ்க்கில் மும்தாஜ்-செண்ட்ராயன் மோதல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் நேற்று 16 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளனர். இவர்களில் 9 பேர் பெண்கள் மற்றும் 7 பேர் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
நிகழ்ச்சியின் விறுவிறுப்புக்காகவும், டிஆர்பியை எகிற வைப்பதற்காகவும் சேனல் நிர்வாகம் என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் முதல் நாளிலேயே போட்டியாளர்களுக்கு இடையே சண்டை சச்சரவு ஏற்படும் டாஸ்க் ஒன்றை பிக்பாஸ் கொடுத்துள்ளார் என்பது யாரும் எதிர்பாராத ஒன்று
 
முதல் டாஸ்க்கில் கூறப்பட்டுள்ளது என்னவெனில் பெட்ரூம்களில் மூன்று என்வலப்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது அவற்றை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் டாஸ்க். இதனால் அனைவரும் பெட்ரூம்களில் அந்த என்வலப்பை தேடி கொண்டிருக்க, மும்தாஜ் ஒரு கண்டிஷன் போட்டார். பெண்கள் இருக்கும் அறைகளில் பெண்களின் ஆடைகளை ஆண்கள் தொடக்கூடாது என்பது தான் அந்த கண்டிஷன். இந்த கண்டிஷனால் அதிர்ச்சி அடைந்த செண்ட்ராயன் புலம்புவது போன்ற புரமோ வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. அதன் பின்னர் இருவருக்கும் முட்டல், மோதல் வந்ததா? என்பது இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின்போது தெரியவரும்