வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 4 நவம்பர் 2024 (11:42 IST)

முதல் படமே லோகேஷ் யுனிவர்ஸ்ல வர படம்! சந்தோஷத்தில் சாய் அபயங்கர்! - எத்தனை பாட்டு தெரியுமா?

Benz

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜினி சினிமாட்டிக் யுனிவர்ஸில் வரும் ‘பென்ஸ்’ படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சியில் உள்ளார் சாய் அபயங்கர்.

 

 

தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் படங்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. கைதி, விக்ரம், லியோ படங்கள் மூலமாக லோகேஷ் உருவாகியுள்ள LCU - Loki Cinematic Universe அடுத்தடுத்து கைதி 2, ரோலக்ஸ், விக்ரம் 3 என பல படங்களுக்கு நீள்வதாக உள்ளது.

 

இந்நிலையில் இந்த வரிசையில் தற்போது புதிய படத்தை அறிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். ‘பென்ஸ்’ என்ற இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். லோகேஷின் கதையை பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக பிரபல ஆல்பம் பாடகர் சாய் அபயங்கர் அறிமுகமாகிறார்.

 

Sai abhyankar


 

 

இவர் ‘ஆசக்கூட’, ‘கட்சி சேர’ உள்ளிட்ட பல பிரபல ஆல்பம் பாடல்களை வெளியிட்டுள்ளார். பிரபல பாடகர் திப்புவின் மகன் தான் இந்த சாய் அப்யங்கர். தற்போது லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இணைந்துள்ளது குறித்து மகிழ்ச்சியுடன் பேசியுள்ள அவர் “எல்சியுவில் ஏற்கனவே இரண்டு இசையமைப்பாளர்கள் (சாம் சிஎஸ், அனிருத்) உள்ளனர். மூன்றாவது நபராக நானும் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். பென்ஸ் படத்தின் ஒவ்வொரு பாடலும் வித்தியாசமாக இருக்கும். படத்தில் 7 முதல் 8 பாடல்கள் வரை இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K