திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 4 நவம்பர் 2024 (11:18 IST)

மெய்யழகன் என் சிறுவயதை ஞாபகப்படுத்தியது..! இயக்குனரை புகழ்ந்த அன்புமணி ராமதாஸ்!

Meiyazhagan.

கார்த்தி, அரவிந்த்சாமி நடித்து வெளியான மெய்யழகன் படத்தை ஓடிடியில் பார்த்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இயக்குனரை பாராட்டியுள்ளார்.

 

 

கார்த்தி, அரவிந்த்சாமி நடித்து சி.ப்ரேம்குமார் இயக்கத்தில் வெளியான படம் ‘மெய்யழகன்’. திரையரங்கில் வெளியானபோதே நல்ல விமர்சனங்களை கண்ட இந்த படம் அதிக நேரம் ஓடுவதாக வந்த புகார்களை ஏற்று சில நிமிட காட்சிகள் வெட்டப்பட்டன. தற்போது இந்த படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி ஓடிடி பார்வையாளர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 

குடும்ப வாழ்க்கை, உறவினர்கள் பற்றி எப்போதுமே நெகட்டிவிட்டியாக படங்கள் இருந்து வரும் நிலையில், இந்த படம் அன்பை போதிப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

இந்த படத்தை சமீபத்தில் ஓடிடியில் பார்த்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் “ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள மெய்யழகன் திரைப்படத்தை தீபஒளி நாளில் கண்டு மகிழ்ந்தேன். முன்னோர் வழி, வம்சாவளி, கிராமத்து கல்யாண விருந்து, காளை, பாம்பு, பல்லியுடன் இணைந்த வாழ்க்கை, குடும்பத்தில் 4 பேர் மட்டுமே இருந்தாலும் கூட, பெரிய தாத்தா, சின்ன தாத்தா, அவர்களின் வகையறா என உறவுமுறைகளை இன்றைய இளம் தலைமுறைக்கு எடுத்துக்கூறும்  சிறந்த படம். எனது சிறுவயது கிராமத்து நினைவுகளை மீண்டும் முழுமையாக எனக்குள் கொண்டுவந்த படம். நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி ஆகியோர் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.  இயக்குநர் சி.பிரேம்குமார் பார்வையாளர்களை உறவுக்கூட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். Really felt good watching this feel good movie” என பாராட்டியுள்ளார்.

 

திரையரங்கில் ஓடியபோதும், தற்போது ஓடிடியில் வெளியான பிறகும் தொடர்ந்து நல்ல விமர்சனங்களை மெய்யழகன் பெற்று வருவதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

 

Edit by Prasanth.K