1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 14 ஜூலை 2022 (19:26 IST)

மிஷ்கினின் ''பிசாசு'' உன்னதமானது - விஜய்சேதுபதி பட இயக்குனர்.

pisasu
மிஷ்கின் இயக்கத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாகி வந்த திரைப்படம் ’பிசாசு 2’ இப்படத்தைப் பாராட்டியுள்ளார் விஜய்சேதுபதி பட இயக்குனர்.

பிசாசு படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா நடித்துள்ளார் என்பதும் ஆண்ட்ரியாவுக்கு இந்த படம் திருப்புமுனையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ’பிசாசு 2’ படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த  நிலையில், தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுறை. மாமனிதன் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கிய முன்னணி இயக்குனர் சீனு ராமசானி தனது டுவிட்டர் பக்கத்தில், இப்படடத்தின் போஸ்டரை வெளியிட்டு, மனிதனை விட மிஷ்கினின் பிசாசு உன்னதமானது எனப் பதிவிட்டுள்ளார்.