1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 20 ஜூன் 2017 (23:38 IST)

எங்க அப்பாவைத் தவிர நான் எந்த ஆணையும் நம்புறது இல்ல. சீரியல் நடிகை ஷில்பா

சீரியல் பார்க்கும் வழக்கம் உள்ளவர்களுக்கு சின்னத்திரை ஷில்பாவை தெரியாமல் இருக்க முடியாது. 'மெல்ல திறந்தது கதவு', 'தாமரை, உள்பட பல சீரியல்களில் நடித்து வரும் இவர் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையுலகில் உள்ளார்.





இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியபோது, 'எங்கப்பாவை போல ஒரு நேர்மையாளரை இதுவரை நானும் என்னுடைய அக்காவும் பார்க்கவில்லை. அப்படி பார்த்தால் திருமணம் செய்து கொள்ளலாம். இல்லாவிட்டால் இருவருமே கடைசி வரைக்கும் திருமணம் செய்யாமலே இருக்க முடிவு செய்துள்ளோம்' என்று கூறியுள்ளார்.

மேலும் தனக்கு ஏகப்பட்ட லவ் புரபோசல் வந்துள்ளதாகவும், என் மீது உயிரையே வைத்திருப்பதாக கூறியவர் அனைவரும் இன்று திருமணம் ஆகி குழந்தைகளுடன் இருப்பதாகவும், இந்த மாதிரி பொய் காதல் மீது தனக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை என்றும் அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.