ஷூட்டிங் ஸ்பாட்டில் சமையல் செய்து அசத்தும் பிரபல நடிகை

cook
Last Updated: புதன், 31 ஜனவரி 2018 (11:29 IST)
மலையாள நடிகை ஒருவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் படக்குழுவினருக்கு சமையல் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நடிகர் நடிகைகள் தங்களது ஓய்வு நேரத்தில் கேரவனுக்கு சென்று ரெச்ஸ்ட் எடுப்பார்கள். ஒரு சில நடிகர்கள் மட்டுமே தங்களது படக் குழுவினருக்கு விருந்தளிப்பார்கள். இதில் அஜித் மற்றும் விஜய் படப்பிடிப்பின் போது, டெக்னீஷியன்களுக்கு விருந்தளிப்பது வழக்கம்.
anu
இந்நிலையில் ரெட் ஒயின், டைமண்ட் நெக்லஸ் உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்த அனுஸ்ரீ, படப்பிடிப்பின் இடைவேலைகளில், படக்குழுவினருக்கு உணவளிக்க சமையல் காரர்களுடன் சேர்ந்து உணவு தயாரிக்க சென்றுவிடுவாராம். அவர் சமையல் காரர்களுடன் சேர்ந்து தோசை சுடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் சமூக வலைதளங்களில் பலர் அனுஸ்ரீயை பாராட்டி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :