1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 21 ஜனவரி 2019 (18:12 IST)

’தல ரசிகராக ’நடிக்கும் பிரபல நடிகர் ...படம் ஹிட்டு தான்...

'8 தோட்டாக்கள் 'என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் ஸ்ரீகணேஷ். அவர் இயக்கவிருக்கும் அடுத்த படம் 'குருதிஆட்டம்'. இதில் நாயகனாக அதர்வா நடிக்கிறார்.
மதுரையில் நடக்கும் கேன்ங்ஸ்டர் பற்றிய படம் இது.இதில் ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு யுவன் ஷங்கர்ராஜா இசையமைக்கிறார். 
 
மேலும் இப்படத்தில் அதர்வா அஜித் ரசிகராக வருவதாக தகவல் வெளியாகிறது. இப்படத்தில் ஆடியன்ஸைக் கவரும் வகையில் பல புதிய  விஷயங்கள் இருப்பதாகவும் தகவல் வெளியாகின்றன.