ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வியாழன், 11 ஜூன் 2020 (00:18 IST)

போலீஸுக்கு டிமிக்கு கொடுத்த பிரபல நடிகர் !

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் தற்போது இஸன் இம்பாசிபில் என்ற படத்தின் 7ஆம் பாகத்தை தயாரித்து நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்புகள் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் நடந்து வந்த நிலையில் கொரொனா பாதிப்பால தடைபட்டது.

இதற்காக லண்டனில் உள்ள ஆக்ஸோர்டஹையர் என்ற இடத்தில் பிரமாண்டமான செட் போடப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள அமெரிக்காவில் இருந்து லண்டனுக்கு வந்தால் டாம் குரூஸ் 14 நாட்கள் தனிமையில் இருக்க்க வேண்டும்.ஆனால் லண்டன் அருகில் உள்ள பிக்கின் கின் நகரில் இந்த விதி இல்லை. எனவே 8 ஆம் தேதி அமலுக்கு வரவுள்ளதாக அறிவித்த நிலையில் டாம் குரூஸ் அமெரிக்கா ஃபுளோரிடா விமானத்தில் இருந்து 11 மணிநேரம் பயணம் செய்து, திஙகட்கிழமை அவ்விதி அமலுக்கு வரும் முன்னமே பிக்கின் நகருக்குச் சென்று விட்டார்.

அதனால் 14 நாட்கள் அவருக்கு மிச்சமாகி படம் பிடிப்பு தொடங்க ஆயத்தமாகிவிட்டார்.