'புஷ்பா 2 'படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..ரசிகர்கள் மகிழ்ச்சி
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா.
இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியாகி 350 கோடி ரூபாய்க்கு வசூல் குவித்து, ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தின் வெற்றியை தொடர்து புஷ்பா 2 திரைப்படம். பிரம்மாண்டமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் அல்லு அர்ஜூன் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
இந்த நிலையில், புஷ்பா 2 படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும் என் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். எனவே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இன்று அறிவித்துள்ளது.
இன்று புத்தாண்டையொட்டி வாழ்த்துக் கூறிய புஷ்பா 2 படக்குழு வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது என்று தெரிவித்துள்ளது.