திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 12 ஜூன் 2020 (18:52 IST)

இரண்டு பிரபல ஹீரோக்களை பெண்களுடன் கோர்த்துவிட்டு கிண்டலடிக்கும் சதிஷ்!

தமிழ் சினிமாவில் நடிகர்களாக நிலைத்து நிற்பதும் ரசிகர்கள் மனதில் இடம்பிடிப்பதும் அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. வாரிசு நடிகர்களாக இருந்தால் கூட அவர்களுடைய நடிப்பு, மற்றும் கதை தேர்வு உள்ளிட்டவை மக்களுக்கு பிடித்தால் மட்டுமே நடிகர்களாக நிலைக்க முடியும் என்கிற நிலை உருவாகிவிட்டது.

இதே நிலை தான் காமெடி நடிகர்களுக்கும், வித்தியாசமான காமெடி மூலம் அவர்கள் தங்களை நிரூபித்தால் மட்டுமே திரையுலகில் ஜெயிக்க முடியும். அந்த வகையில் வளர்ந்துவரும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் சதீஷ். மேடை நாடகங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றி தற்போது பெரிய திரையில் அசத்திவரும் சதீஷ்.. விஜய், தனுஷ் , சிவகார்த்திகேயன் , என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார்.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் சதீஷ் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில்,  "பொண்ணுங்க ப்ரொஃபைல் ஓப்பன் பண்ணா நீங்க தான் இருக்கீங்க" என்ற கவுண்டமணி , செந்தில் மீம் ஒன்றை ஷேர் செய்து நடிகர்கள் வைபவ் மற்றும் ஜெய் இருவரை டேக் செய்து கலாய்த்துள்ளார். இந்த ட்விட்டிற்கு பிரேம்ஜி உள்ளிட்ட பிரபலங்கள் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.