ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 13 மே 2018 (10:56 IST)

பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்தது பழிவாங்கும் செயல் - வைரமுத்து கண்டனம்

இயக்குனர் பாரதிராஜா மீது போலீஸார் வழக்கு பதிவு செய்திருப்பது பழிவாங்கும் செயல் என வைரமுத்து கண்டனம்  தெரிவித்துள்ளார்.
கடந்‌த ஜனவரி மாதம் 18ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் பாரதிராஜா பேசியபோது இந்து கடவுள் வினாயகர் குறித்து அவதூறாகப் பேசியதாக‌ கூறப்பட்டது. இதுகுறித்து இந்து மக்கள் முன்னணியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் காவல்நிலையத்தில்‌ புகார் அளித்தார். ஆனால் இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் புகார்தாரர் நீதிமன்றம் சென்ற நிலையில் நீதிமன்ற உத்தவுபடி பாரதிராஜா‌ மீது இரண்டு பிரிவுகளின்கீழ் வடபழனி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனப்பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பாரதிராஜா மீது வழக்கு பழிவாங்கும் செயலாகும். வழக்கு பெரிதல்ல; ரப்பர் மரத்துக்கு ரணங்கள் புதிதல்ல. அவரை நாங்கள் சட்டப்படி மீட்டெடுப்போம் என்று கூறியுள்ளார்.