சனி, 14 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (09:26 IST)

சினிமா என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை… நான்தான் சினிமாவை தேர்ந்தெடுத்தேன் – பா ரஞ்சித்!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தங்கலான்’ திரைப்படத்தில் விக்ரம், பார்வதி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடிக்க, ஜி வி பிரகாஷ் இசையில் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் உள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ள நிலையில் சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் மற்றும் முதல் சிங்கிள் பாடல் ஆகியவை அந்த எதிர்பார்ப்புக்கு தீனி போடுபவையாக அமைந்துள்ளன. படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் நேற்று நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பா ரஞ்சித் பேசும்போது “சினிமா என்பது நம் வாழ்வோடு கலந்துள்ளது. நான் சிறுவயதில் சினிமா பார்த்து பார்த்து அதனால் சினிமா எடுக்க வந்தேன் என சொல்லமாட்டேன். நான் கல்லூரி படிக்கும்போது அங்கு திரைப்பட விழா ஒன்று நடந்தது. அதில் நான் பார்த்த உலக சினிமாக்கள்தான் என்னை சினிமாவுக்குள் தள்ளின. நான் பார்த்த சில்ட்ரன் ஆஃப் ஹெவன், லைஃப் ஈஸ் பியூட்டிஃபுல் போன்ற படங்கள்தான் ஓவியனான என்னை சினிமா பற்றி யோசிக்க வைத்தன. அதனால் நான்தான் சினிமாவை தேர்ந்தெடுத்தேன், சினிமா என்னை தேர்ந்தெடுக்கவில்லை என்று இங்கு நான் சொல்லிக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.