வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 28 ஜூலை 2024 (19:06 IST)

’டிமான்டி காலனி 2’ சென்சார் தகவல்.. 18 வயதுக்கு குறைவானவர்கள் பார்க்க முடியுமா?

demonty colony2
சமீபத்தில் தனுஷ் நடித்த ’ராயன்’ திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதால் 18 வயது குறைவானவர்கள் இந்த படத்தை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் டிமான்டி காலனி 2 படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளதால் படக்குழுவினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவான டிமான்டி காலனி என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்தது. இந்த படத்திற்கும் யூஏ சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஒன்பது வருடங்கள் கழித்து வெளியாக இருக்கும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் யூஏ சான்றிதழ் தான் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து இந்த படம் வெளியாக இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில் படக்குழுவினர் புரமோஷன் பணியை தொடங்க இருப்பதாகவும் தமிழகம் முழுவதும்  ப்ரோமோஷன் பணிகளை செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அருள்நிதி, ப்ரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், பிக் பாஸ் அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவும் குமரேஷ் படத்தொகுப்பு பணியும் செய்து உள்ளனர்.

Edited by Siva