திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 20 டிசம்பர் 2019 (19:03 IST)

காலையில் தியேட்டர்களில் ரிலீஸான தம்பி- மதியம் தமிழ்ராக்கர்ஸில் !!

கார்த்தியின் தம்பி திரைப்படம் திரையரங்குகளில் வெளியான அதே நாளில் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியானது தயாரிப்பாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது
 

கார்த்தி நடிப்பில் தீபாவளி பண்டிகையன்று வெளியான செய்தி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை அடுத்து தற்போது அவரது நடிப்பில் இன்று வெளியான தம்பி திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது. ஜோதிகா சத்யராஜ் மற்றும் சவுகார்ஜானகி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் இந்தப் படம் குடும்ப ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை நாட்கள் தொடங்கி உள்ளதால் படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் வசூலை பாதிக்கும் விதமாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் இந்த படம் இன்று வெளியாகியுள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.