1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (07:49 IST)

தம்பி ராமையா மகன் உமாபதி நடிக்கும் படத்தின் வித்தியாசமான தலைப்பு!

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நகைச்சுவை நடிகராகவும் அறியப்படுபவர். இவர் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் உருவான இந்திரலோகத்தில் நா அழகப்பன் திரைப்படம் கவனத்தைப் பெற்றது. அதன் பின்னர் மைனா படம் மூலமாக முன்னணி நடிகராகிவிட்ட இவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி இப்போது கதாநாயகனாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். கமர்ஷியல் படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்துக்கு வித்தியாசமான தலைப்பாக “பித்தள மாத்தி” என்று வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

உமாபாதி தன் தந்தை தம்பி ராமையா இயக்கத்தில் வேறொரு படத்திலும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த படத்துக்கு சிறுத்தை சிவா என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் உமாபதிக்கும் நடிகர் அர்ஜுனின் மகளான ஐஸ்வர்யாவுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.